‘களவாணி’ டைட்டில் பஞ்சாயத்து

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (21:37 IST)
விமல், ஓவியா நடிப்பில் வெளியான ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாக டைட்டிலுக்கு பஞ்சாயத்து நடந்துள்ளது.

 
விமல், ஓவியா நடிப்பில் 2010ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘களவாணி’. சற்குணம் இயக்கிய இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஓவியா முதன்முதலாக தமிழில் நடித்த படம் இதுதான். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பஞ்சாயத்து’ காமெடி இன்றளவும் பிரபலம். ஷெராலி பிலிம்ஸ் சார்பில் நஸீர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
 
இந்நிலையில், மீண்டும் விமல், ஓவியாவை வைத்து ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க நினைத்தார் சற்குணம். வேறொருவர் படத்தைத் தயாரிக்க முன்வந்த நிலையில், படத்தின் டைட்டிலைத் தர மறுத்துவிட்டார் நஸீர். எனவே, ‘கே 2’ என்ற பெயரில் இப்போதைக்கு ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார் சற்குணம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்