பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (14:01 IST)
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி (42). அதில் கிடைத்த புகழை வைத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த  15 நாட்களுக்கு முன் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கை, கால்கள் வாத நோயால் முடங்கியுள்ளது. தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையிலே இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த சக திரைப்  பிரபலங்கள் வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்