தனுஷ் படத்தில் நடிக்க ரூ.4 கோடி வாங்கும் நடிகை!!

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (11:14 IST)
கடந்த 1997ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவான 'மின்சார கனவு' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கஜோல் அறிமுகமானார்.


 
 
நடிகை கஜோல் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
இந்நிலையில், தற்போது சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகை கஜோல், கதாப்பாத்திரம் பிடித்துவிட்டதால் நடிக்க ஒப்புகொண்டதாகவும், இந்த படத்துக்காக கஜோலுக்கு ரூ.4 கோடி சம்பளம் தர படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிந்துள்ளது.
 
கஜோல் 'விஐபி 2' படத்தில் இணைந்துவிட்டார் எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்