த்ரிஷா, நயன்தாரா வழியில் நடிகை காஜல் அகர்வால்

Webdunia
வியாழன், 13 ஜூலை 2017 (11:37 IST)
சீனியர் நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியவத்துவம் உள்ள கதையில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


 

 
பிரபல நடிகை காஜல் அகர்வால் சினிமா துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளார். இதுவரை சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். த்ரிஷா, நயன்தாரா ஆகியோர் போல் இவரும் சீனியர் நடிகைதான். தற்போது மெர்சல், விவேகம் மற்றும் தெலுங்கில் நானே ராஜூ நானே மந்திரி ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.
 
இதுவரை காஜல் அகர்வால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்தது இல்லை. அதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது இல்லை. இந்நிலையில் இயக்குநர் பி.வாசு மூலம் அந்த வாய்ப்பு காஜலுக்கு கிடைத்துள்ளது. கதை பிடித்திருக்க உடனே ஓகே செல்லிவிட்டார் காஜல். விரைவில் இந்த புதுபடத்தின் முதற்கட்ட வேலைகள் தொடங்கும் என கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்