பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்த கோஸ்டி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது,
விடுங்கடா விடுங்கடா என்று தொடங்கும் இந்த பாடலை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கம்போஸ் செய்துள்ளார் என்பதும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் யோகி பாபு, கேஎஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, தங்கத்துரை, ஜெகன், ஊர்வசி, ஆடுகளம் நரேன் ,மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கல்யாண் என்பவர் இயக்கியுள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.