தனுஷ் நடித்த ‘வாத்தி’ சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வியாழன், 10 நவம்பர் 2022 (18:15 IST)
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகியுள்ளது
 
தனுஷ் எழுதிய இந்த பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மெலடி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை இசை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 
 
தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய் குமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்