இர்பான் கான் நடித்திருக்கும் மடாரி படபோஸ்டரைப் போன்று கபாலி படத்தின் போஸ்டரை ரசிகர் ஒருவர் வடிவமைத்திருந்தார்.
அது கபாலி படக்குழுவே வடிவமைத்தது என்ற தப்பான புரிதலில் இர்பான் கான் சில விஷயங்களை கூறியிருந்தார்.
என்னுடைய பட போஸ்டரைப் பார்த்து கபாலி போஸ்டரை வடிவமைத்தது மகிழ்ச்சிதான். அந்தப் போஸ்டரையும் பாருங்க, எங்க போஸ்டரையும் பாருங்க. எங்க படத்தையும் பாருங்க, கபாலியையும் பாருங்க என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், போஸ்டரை வடிவமைத்தது ரசிகர் என்பதை தாணு தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இர்பான் கான் விளக்கம் அளித்துள்ளார். ரஜினியை ஒரு மனிதராகவும், நடிகராகவும் பிடிக்கும். அவர் மீது மரியாதை வைத்திருக்கிறேன். கபாலி போஸ்டரை வடிவமைத்தது ஒரு ரசிகர் என்பதை இதன் மூலம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என கூறியுள்ளார்.