சவுதியில் காலாவுக்கு கிடைத்த பெருமை!

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (13:00 IST)
சவுதி அரேபியாவில் வெளியான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை ரஜினி நடித்த காலா படம் பெற்றுள்ளது.
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்‌ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று முன்தினம் உலகமெங்கும் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
 
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் ரிலீஸான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை காலா படம் பெற்றுள்ளது. அந்நாட்டில் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு சமீபகாலமாக அங்கு படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் அங்கு ரிலீஸான காலா படம் அந்நாட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்