தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்க்க ரூ.50 ஆயிரம் கேட்ட நீதிபதி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (17:39 IST)
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை பார்க்க நியமிக்கப்படும் வழக்கறிஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
மதுரைச் சேர்ந்த பசும்பொன் என்பவர் தீரன் அதிகராம் ஒன்று திரைப்படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக சீர்மரபினர் பட்டியலில் உள்ள 235 பிரிவு சமூகத்தினரை தவறாக சித்தரித்தும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்தும், படத்தில் கிடைக்கும் 50 சதவீதம் பணத்தை சீர் மரபினர் சமூகத்தினர் மேம்பாடுக்கு செலவிட வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
 
இந்த வழக்க விசாரித்த நீதிபதி, நான் இந்த திரைப்படத்தை பார்க்கவில்லை. அதனால் என்னால் எந்த கருத்தும் கூற முடியாது. படத்தை பார்த்து அதில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அறிக்கை அளிக்க இரண்டு வழக்கறிஞர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். இதை மனுதாரர் ஏற்றுக்கொள்வாரா என கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்