பிக்பாஸ் பிரபலம் நடிகை ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி

Webdunia
சனி, 2 டிசம்பர் 2017 (15:21 IST)
தமிழ் சினிமாவில் காமெடி நடிகையாக நடித்து வருபவர் ஆர்த்தி. சமீபத்தில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம்  பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.
இவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும்  பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இவரும் ஜூலியும்தான் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொள்வார்கள். பின்னர்  நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளூக்காக மொட்டை அடித்துக்கொண்டு உதவியதாக  தெரிவித்தார்.
இந்த நிலையில் அவருக்கு முழங்காலில் சவ்வு கிழிந்துள்ளதால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனால்  அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தனது டுவிட்டரில், சிகிச்சைக்கு பிறகு அவர் எடுத்துள்ல ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து  தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்