ஜெயம் ரவியின் புதிய படம் டிக் டிக் டிக்

Webdunia
சனி, 3 செப்டம்பர் 2016 (13:09 IST)
ஜெயம் ரவியின் புதிய படத்துக்கு, பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்த டிக் டிக் டிக் படத்தின் பெயரை வைத்துள்ளனர். 


 
 
ஜெயம் ரவியை வைத்து மிருதன் படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் மீண்டும் ஜெயம் ரவியை இயக்குகிறார். அக்டோபரில் இந்தப் படம் தொடங்குகிறது. படத்துக்கு டிக் டிக் டிக் என்று பெயர் வைத்துள்ளனர்.
 
இந்தப் படத்தின் கதை விண்வெளியில் நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது. அதற்காக பிரமாண்ட அரங்கு ஒன்றை சென்னையில் அமைத்துள்ளனர். அதில்தான் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
அடுத்த கட்டுரையில்