ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:33 IST)
ஜீவா-அருள்நிதி நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறந்தாலும் திரையரங்குகளில் கூட்டம் அதிகம் வரவில்லை என்பதும் இதனால் மீண்டும் ஒரு சில திரையரங்குகள் மூடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் பொங்கல் தினத்தில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியானதை அடுத்து மக்கள் திரையரங்குகளுக்கு அச்சமின்றி குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தற்போது பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளன அவற்றில் ஒன்று ’களத்தில் சந்திப்போம்’. ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்த இந்த படம் ஜனவரி 28ஆம் தேதி தைப்பூச தினத்தில் வெளியிட உள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சூப்பர்குட் நிறுவனத்தின் 90ஆவது தயாரிப்பான இந்த படத்தில் மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும் ராஜசேகர் என்பவர் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும்  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் ஜீவா மற்றும் அருள்நிதிக்கு மேலும் ஒரு வெற்றி படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்