மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயம் ரவி...

Webdunia
ஞாயிறு, 7 ஜனவரி 2018 (18:03 IST)
தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். 
 
கடந்த இரண்டு நாட்களாக கலைவிழா ரஜினி கமல் முன்னிலையில் நடைபெற்றது. நடிகர் ஜெயம்ரவி உடல்நிலை சரியில்லாத போதும்  இவ்விழாவில் கலந்துகொண்டார். ஆனால் அவருக்கு கடுமையான ஜுரம் அடித்ததால் தற்போது மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

இதே போல், கால்பந்து போட்டியின் போது ஆரி எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, போட்டியிலிருந்து உடனடியாக வெளியேறிய ஆரி மலேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்