பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் ‘நிமிர்’. மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தில் நமிதா பிரமோத், பார்வதி நாயர், மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தர்புகா சிவா, அஜ்னீஸ் லோக்நாத் இருவரும் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர். சந்தோஷ் டி குருவில்லா தயாரித்துள்ள இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தை, ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, விஷாலின் ‘இரும்புத்திரை’, அனுஷ்காவின் ‘பாகமதி’ ஆகிய படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. அந்த பட்டியலில் தற்போது உதயநிதி ஸ்டாலினும் இடம்பிடித்துள்ளார்.