ஜெயம் ரவியின் 28வது படத்தின் சூப்பர் அப்டேட்!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (17:25 IST)
ஜெயம் ரவி நடிக்க இருக்கும் 28வது திரைப்படத்தின் அப்டேட்டை சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் 
 
ஜெயம் ரவி நடிப்பில் ’பூலோகம்’ கல்யாண் குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படம் ஜெயம் ரவி 28. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியா பவானி சங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்
 
ஜெயம் ரவி நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்