இயக்குனர் பாலா கைவிட்ட தலைப்பை தேர்வு செய்த ஜெயம் ரவி படக்குழு!

புதன், 9 பிப்ரவரி 2022 (09:45 IST)
ஜெயம் ரவி இப்போது பூலோகம் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் வடசென்னை குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான திரைப்படம் பூலோகம். இந்த படத்தை எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் கல்யாண் கிருஷ்ணன் இயக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். ஆனால் இயக்குனருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீண்டகாலமாக முடங்கிக் கிடந்தது. இதையடுத்து இப்போது பூலோகம் இயக்குனரின் இரண்டாவது படத்தில் ஜெயம் ரவி நடிக்க உள்ளார்.

இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி இப்போது ஈழத் தமிழராக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் இயக்குனர் கல்யாண் படமாக்கி முடித்துவிட்டார்.

இதுவரை இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது அகிலன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அகிலன் என்ற தலைப்பில் தான் இயக்குனர் பாலா தனது முதல்படத்தை தொடங்கினார். ஆனால் அந்த படம் ட்ராப் ஆனதை அடுத்து அதே கதையை சேது என்ற பெயரில் விக்ரம்மை வைத்து இயக்கி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்