கூகிளில் அதிகம் தேடப்பட்ட படங்கள்! – ஜெய்பீம் முதலிடம்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (16:08 IST)
இந்த ஆண்டில் கூகிளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்களின் பட்டியலில் ஜெய்பீம் முதலிடம் பிடித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்கள் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதேசமயம் படம் பல விமர்சனங்களுக்கும் உள்ளானது.

இந்நிலையில் இந்த ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட படங்கள் குறித்த டாப் 10 பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முதல் இடத்தை ஜெய்பீம் பிடித்துள்ளது. இதை தவிர்த்து அதிகமாக தேடப்பட்ட படங்களில் 6வது இடத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்