அந்த கேள்வி கேட்டதால்தான் பிரச்சனை வந்தது- யோகி பாபு

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானார்.

அதன்பின்னர், பையா, வேலாயுதம், ராஜபாட்டை, அட்டகத்தி, அரண்மனை, வேதாளம், பரியேறும் பெருமாள், கொரில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமேடி  செய்து அசத்தினார்.

அதன்பின்னர்,கூர்கா, மண்டேலா, ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.சமீபத்தில், ஜெயிலர், பீஸ்ட், மாவீரன் ஆகிய படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  நடிகர் யோகி பாபு படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் போவதில்லை என இணையதளத்தில் தகவல் பரவியது.

இதற்கு விளக்கம் அளித்த யோகி பாபு, ’’இதற்கு முன்  நடித்த படத்தில் நாலைந்து காட்சிகளில்தான் நடித்த என்னை வைத்து போஸ்டர் வெளியிட்டனர். இது ரசிகர்களை ஏமாற்றுவது போல் ஆகாதா என கேள்வி கேட்டேன். இப்படிக் கேட்டதால் தான் பிரச்சனை வந்தது.

இதனால் நான் படப்பிடிப்புக்கு சரியாக வருவதில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர். நான் கதை கேட்டு நடிப்பதைக் காட்டிலும் இயக்குனர்களின் கஷ்டம் கேட்டு படத்தில் நடித்துவருகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்