“இசை விருந்து வந்துகொண்டிருக்கிறது…” VTK படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (14:14 IST)
மாநாடு திரைப்படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் திரைப்படமான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மேலும் பயங்கரமான எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில் சிம்பு – கௌதம் – ஏ ஆர் ரஹ்மான் ஆகிய வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. சென்னை மும்பை என இரண்டு இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் இப்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ’காலத்துக்கும் நீ வேணும்’ என்கிற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் ரிலீஸூக்குப் பின்னர் அமேசான் ப்ரைம் தளத்தில் “VTK” திரைப்படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பகிர்ந்துள்ள டிவீட்டில் படத்தின் இசை பற்றி கூறி எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளார். சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் ரஹ்மானை சந்தித்த அவர், தன்னுடைய டிவீட்டில் “மொசார்ட் ஆஃப் தி மெட்ராஸ் ரஹ்மானை சந்தித்து எங்கள் படம் குறித்து பேசினோம். ரசிகர்களுக்கு சிறப்பான இசை விருந்து வந்துகொண்டிருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்