வலிமை படத்தில் ஜான் ஆப்ரஹாம் நடிக்கிறாரா? ரசிகர்களை உற்சாகப்படுத்திய தகவல்!

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (17:38 IST)
நடிகர் அஜித் நடிக்கும் வலிமை திரைப்படத்தில் பாலிவுட் நட்சத்திரம் ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தை பற்றிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளிவரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பல போலியான ஐடிக்களில் இருந்து வலிமை படம் பற்றிய போலியான தகவல்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இப்போது வலிமை படத்தில் பாலிவுட் நடிகரான ஜான் ஆப்ரஹாம் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் இப்போது அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர். வலிமைப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் பிறகு ஜான் ஆப்ரஹாம் நடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்