இந்த முறை நிச்சயம் ஆரி தான் வெற்றியாளர் என மக்கள் எப்போதோ கணித்துவிட்டனர். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட அர்ச்சனா , நிஷா , ஜித்தன் ரமேஷ், ரேகா உள்ளிட்டோர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து போட்டியாளர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.
இரண்டாவது ப்ரோமோவில் எல்லோரும் சேர்ந்து ஜாலியாக ஆட்டம் போட்டு குதூகலித்துள்ளனர். மேலும் நிஷா, ரம்யாவிடம் வெளியில் போனதற்கு பிறகு மக்கள் எல்லாம் scripted என்று சொல்கிறார்கள் என கூறி இந்த நிகழ்ச்சி மக்களிடம் எப்படி பிரதிபலித்துள்ளது என்பதை தெரிவித்தார்.
இவ்வளவு நாட்கள் தனியாக விளையாடிய ஆரிக்கு இது ஒன்றும் புதிது இல்லை. இனி ரியோ சோமைத்தான் கையிலையே பிடிக்க முடியாது. ரேக்கா என்று ஒரு கேரக்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததே மறந்துவிட்டோம் இப்போதான் நியாபகம் வருது. அதையடுத்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் பாலா மற்றும் ஆரி இவரும் தங்களது அனுபவத்தை குறித்து சக ஹவுஸ்மேட்ஸ்களுடன் பகிர்ந்துகொண்டனர். யப்பா விஜய் டிவி.... நீங்க கம்பு சுத்துறத கேக்க முடியல சட்டுனு ஆரி தலைவனுக்கு கப்பு கொடுங்க நாங்க போய்கிட்டே இருக்கோம்...