விமர்சகர்களின் குற்றமா அல்லது புள்ளீங்கோகளின் குற்றமா?’’ -புளூ சட்டை மாறன்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய்,திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19 ஆம் தேதி வெளியான படம் லியோ.

இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் வசூல்  குவித்து வருகிறது. இப்படம் ஒரு வாரத்தில் ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள நிலையில், இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்து வருகிறார்.

இப்படத்தைப் பற்றி பல யூடியூப் சேனல்கள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’லியோ படம் பீகார், ஜார்கண்ட், துர்க்மனிஸ்தான் என பல இடங்களில் அபார வெற்றிபெற்று வருகிறது.

இது பொறுக்காமல்.. லோகேஷை வசைபாடும் 'வலைப்பேச்சு'அந்தணனின் சதிவலைக்கான பிண்ணனி காரணம்  என்ன?

லியோவின் decoding, hidden layer புரியாமல் படம் பார்ப்பது யார் குற்றம்?

விதியின் குற்றமா? விதியை சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?

படம் ஓடாவிட்டால் decoding, hidden layer என யூட்யூப் சேனல்களில் ஓயாமல் ப்ளேடு போடும் இயக்குனர்களை வளர்த்தது யார் குற்றம்?

விமர்சகர்களின் குற்றமா அல்லது புள்ளீங்கோகளின் குற்றமா?’’ என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்