அப்பாஸ் சினிமாவை விட்டே செல்ல காரணமாக இருந்தது ஒரு நடிகரா?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (10:15 IST)
நடிகர் அப்பாஸ் தற்போது சினிமாவில் இருந்து விலகி நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகியுள்ளார். இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், உடனடியாக சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் மாறினார். அதையடுத்து அவருக்கு பல படங்கள் புக் ஆகின. ஆனால் அவர் விஜய் அஜித் போல ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடிக்காமல் விட்டார். இதனால் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆக பல படங்கள் பிளாப் ஆகின. இதனால் ஒரு கட்டத்தில் வில்லன் கதாபாத்திரங்கள் வர ஆரம்பித்து கடைசியில் வாய்ப்பே இல்லாமல் போனது. இதனால் அதிருப்தியான அப்பாஸ் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார். இப்போது நியுசிலாந்தில் செட்டில் ஆகியுள்ள அவர் சினிமாவை விட்டு முழுதாக வெளியேற ஒரு நடிகரும் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக அவரே அளித்துள்ள ஒரு நேர்காணலில் இதைப் பகிர்ந்துள்ளார். தற்போது சிசிஎல் என்றழைக்கப்படும் நடிகர்களுக்கான கிரிக்கெட் தொடரை ஆரம்ப காலத்தில் ஆரம்பித்து ஒருங்கிணைத்ததே அவர்தான். அதன் மூலம் அவருக்குக் கிடைத்த பிரபல்யத்தை அடுத்து ஒரு நடிகர் அவர் மேல் பொறாமை கொண்டு அவரை ஓரங்கட்டியும், கேலி செய்தும் வன்மத்தைக் கக்கியதாகவும் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். இதுவும் தான் சினிமாவை விட்டு வெளியேற ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்