ஐபிஎல், அழகி போட்டிகளை திரையரங்கில் ஒளிபரப்ப அனுமதி வேண்டும்"-த.தி,உ.ச.பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (17:14 IST)
சினிமா தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள்  மற்றும் அரசிடம் கோரிக்கைகள் விடுத்து, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு கொடுத்துள்ளது.

இதுபற்றி செய்தியாளர்களிடம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

‘’தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, திரையரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே வருவதற்காக காரணத்தைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். ஓடிடி க்கு திரைப்படத்தை 4 வாரத்தில் திரையிடுவதாலும், அதன் பப்ளிசிட்டியை ஒரே வாரத்தில் கொடுப்பதாலும் தியேட்டருக்கு வருகின்ற கூட்டம் குறைகின்றது என உறுப்பினர்கள் கருத்துகள் கூறினர்.

எனவே வரும் காலங்களில் 8 வாரங்களுக்கு அப்புறம்தான் ஓடிடியில் படங்களைக் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானங்களை நிறைவேற்றினோம் என்று கூறினார்.

மேலும், திரையரங்குகளில் திரைப்படம் மட்டும் வெளியிட வேண்டும் என்ற சட்டத்தை மாற்றி திரையரங்குகளில் கமர்ஷியலாக, எங்கள் தியேட்டர்களை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளோம்.  நல்ல படங்கள் வருவது குறைந்துள்ளதால், பெரிய பிரபலமான இயக்குனர்கள் பெரிய நடிகர்களை வைத்து மட்டும் படம் இயக்காமல், புது முகங்களை வைத்து வருடம் 4 படங்களை கொடுக்க வேண்டும்.  இதனால் தியேட்டர் செழிப்பாக இருக்கும், தொழிலாளர்களுக்கும் வேலைகிடைக்கும்.

தியேட்டர்களில் ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் கால்பந்து, டென்னின்ஸ், உலக அழகிப் போட்டி வரை அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப அனுமதி வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்