அனுஷ்கா மாதிரி அவஸ்தைப்படணுமா...? அமீர் படத்தில் நடிக்க மறுத்த இனியா

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (19:49 IST)
அமீரின் சந்தனத்தேவன் படத்தில் நடிக்க நடிகை இனியா மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
அமீர் இயக்கத்தில் ஆர்யா, அவரது தம்பி சத்யா நடிக்கும் படம் சந்தனத்தேவன். அமீர் படத்தை தயாரித்து இயக்கி, சின்ன வேடம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் நடிக்க இனியாவிடம் பேசியிருந்தனர். 
 
கதாபாத்திரத்துக்காக கொஞ்சம் குண்டாக வேண்டும் என்று கூறியதால் தற்போது நடிக்க மறுத்துள்ளார் இனியா. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் எடை கூட்டிய அனுஷ்கா அதனை குறைக்க தலைகீழாக நிற்க வேண்டி வந்தது. அதுபோல் அவஸ்தைப்பட முடியாது என்றும் அமீர் படமே வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளாராம் இனியா.
அடுத்த கட்டுரையில்