தேசிய திரைப்பட விருதுக்குழு தலைவராக இயக்குனர் ப்ரியதர்ஷன் நியமனம்

Webdunia
வெள்ளி, 10 மார்ச் 2017 (19:32 IST)
64வது தேசிய திரைப்பட விருதுக்குழுவின் தலைவராக மலையாளப்பட இயக்குனர் ப்ரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.


 

 
வருடம்தோறும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்தின் தேசிய திரைப்பட விருதுப் போட்டிக்கு இந்தியா முழுவதிலிருந்தும் 380 திரைப்படங்கள் அனுப்ப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து விருதுக்குரியனவற்றை தேர்வு செய்ய வேண்டும். இந்தத் தேர்வுக்குழுவின் தலைவராக ப்ரியதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்வுக்குழு நடுவராவது இதுவே முதல்முறை.
 
ப்ரியதர்ஷன் 36 வருடங்களாக திரைத்துறையில் இருக்கிறார். மலையாளம், தமிழ், இந்தி என பலமொழிகளில் 91 திரைப்படங்கள் இயக்கியுள்ளார். சென்ற வருடம் இவரது இயக்கத்தில் வெளிவந்த மலையாளப் படம் ஒப்பம் வெற்றி பெற்றது. தமிழில் இவர் இயக்கிய சில சமயங்களில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
அடுத்த கட்டுரையில்