என்னால நடிக்கமுடியாது ஆள விடுங்க...சங்கரிடம் தீர்த்து சொன்ன கமல்!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (14:53 IST)
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமான இயக்குனர் ஷங்கர் இயக்கும் 14வது படம் இது. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தாயாருக்கும் இப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.
கமல், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர்,  ரகுல் ப்ரீத் சிங் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் அடிக்கடி செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது சேனாதிபதி தாத்தாவின் ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல் வெளிவந்துள்ளது. 
 
அதாவது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்ததால்  கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து ஓய்வெடுத்து வந்த அவர் அறுவை சிகிச்சை முடிந்த கையோடு ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தால் சரியாக இருக்காது எனவே டூப் போட்டுக் கொள்ளலாம் என்று கமல் சங்கரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து படக்குழுவினர் தற்போது நடிகர் விவேக்கின் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டது வருவதாக கூறப்படுகிறது. மேலும் வருகிற ஜனவரி 5-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்