டார்ச்லைட் படத்தில் விலைமாதுவாக முக்கிய கதாபாத்திரத்தில் ரித்விகா

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2017 (16:46 IST)
‘மெட்ராஸ்’ படத்தில் கலையரசன் ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அடுத்து கபாலி, ஒரு நாள் கூத்து, இருமுகன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான வேடங்களில் நடிக்கவே ஆர்வம் காட்டி வருகிறார் ரித்விகா.

 
‘டார்ச் லைட்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், புதுமுகம் உதயா, ரித்விகா, ஏ.வெங்கடேஷ், சுஜாதா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில், பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா. 
 
இந்த டத்தில் நடிகை சதா நாயகியாக நடித்து வருகின்றார். பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் சதாவை சிவப்பு விளக்கு  ஏரியாவிற்கு அழத்து செல்வது இவர்தானாம். அந்த வகையில் ரித்விகாவின் கதாபாத்திரம் முக்கியமானது. மெட்ராஸ் படத்துக்கு பிறகு இந்தபடம் பெரிதாக பேசவைக்கும் படமாக இருக்கும் என்று ரித்விகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்