வட இந்தியாவில் வாடிய கார்த்தி

Webdunia
வெள்ளி, 5 மே 2017 (16:06 IST)
படப்பிடிப்புக்காக வடஇந்தியாவுக்குச் சென்ற கார்த்தி, வெயிலில் வாடி வதங்கி திரும்பியிருக்கிறார்.

 
‘சதுரங்க வேட்டை’ வினோத், கார்த்தியை வைத்து இயக்கிவரும் படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. கார்த்தி ஜோடியாக ரகுல்  ப்ரீத்சிங் நடிக்கிறார். தெலுங்குல் கார்த்திக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், அங்கும் படத்தை ரிலீஸ் செய்யலாம் என தெலுங்கில் முன்னணியில் இருக்கும் ரகுல் ப்ரீத்சிங்கை நாயகியாக்கி இருக்கிறார்கள். 
 
2005ஆம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திதான் இந்தப் படத்தின் ஒன்லைன். அதைத் திரைக்கதையாக மாற்றுவதற்காக, அந்த செய்தியைப் பற்றிய முழுவிவரங்களையும் அலைந்து திரிந்து சேகரித்து, 600 பக்க டாக்குமெண்டாகத்  தயார் செய்திருக்கிறார் வினோத். அதிலிருந்துதான் இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார். 
 
டி.எஸ்.பி.யான கார்த்தி, வழக்கொன்றை விசாரிப்பதற்காக இந்தியா முழுவதும் சுற்றி வருவதுதான் படத்தின் கதை. பாதி படம்  வடஇந்தியாவில் நடப்பது போன்று காட்சிகளை அமைத்துள்ளார் வினோத். எனவே, 45 நாட்கள் கொளுத்தும் வெயிலில் அங்கு படம்பிடித்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்காமல், வதங்கிய கத்தரிக்காய் போலாகிவிட்டாராம் கார்த்தி.
அடுத்த கட்டுரையில்