தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.
இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி சர்காரு வாரு பாட்டா பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் என்பதால் அன்று சர்க்காரு வாரு பாட்டா படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தகவல் வெளியாகிறது. இதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.#SarkaruVaariPaata
Get ready to witness the
SUPERSTARs MAASSSSSive SWAG on AUGUST 9th