சூப்பர் ஸ்டார் பட முக்கிய அப்டேட்…குஷியில் ரசிகர்கள்

வியாழன், 29 ஜூலை 2021 (21:56 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு  சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார்.

இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.  இந்நிலையில் இன்று சர்காரு வாரு பாட்டா படக்குழுவினர்  ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதில்,  வரும் ஜுலை 31 ஆம் தேதி சர்காரு வாரு பாட்டா  படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  அநேகமாக இப்படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்