’ தோனியின் மகளை ’நான் கடத்த போகிறேன் - பிரபல நடிகை ’இன்ஸ்டா பதிவு’

Webdunia
வியாழன், 9 மே 2019 (17:56 IST)
உயிரே படத்தின் மூலமாக இந்திய சினிமா ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் பலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. கேப்டன் கூல் என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் தோனியின் மகளைப் பற்றி தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 5 ஆம் தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  மோதின. இப்போட்டியின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர் மற்றும் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியுடன் பேசினார்.
 
இதனையடுத்து பிரீத்தி ஜிந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
கேப்டன் கூல் தோனிக்கு நான் உட்பட ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இம்முறை எனது அன்பு அவரது செல்ல மகள் ஜிசாவை நோக்கி மாறியுள்ளது. இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட போது அவரிடம் நான் ஜிவாவைக் கடத்தலாம் என இருக்கிறேன் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவித்தேன்.இப்புகைப்படத்திற்கு ஒரு தலைப்பு கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
 
மேலும் இந்தப் புகைப்படத்தைக் கண்ட ரசிகர்கள் அனைவரும் எதார்த்தமாகவும், அழகாகவும் உள்ளீர்கள் என்று கூறியதுடன், புகைப்படத்திற்கான தலைப்பாக ’வெற்றி பெற்றதற்கு மன்னித்துவிடுங்கள் ’என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
தற்போதுவரை 4 லட்சத்திற்கு மேலானோர் இப்புகைப்படத்திற்கு லைக்குகள் இட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Captain cool has many fans including me, but off-late my loyalties are shifting to his little munchkin Ziva. Here I’m telling him to be careful - I may just kidnap her

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்