132 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே! மும்பை வெல்லுமா?

செவ்வாய், 7 மே 2019 (21:16 IST)
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முதல் பிளே ஆப் போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 131 ரன்கள் எடுத்துள்ளது. தல தோனி 37 ரன்களும், ராயுடு 42 ரன்களும், முரளி விஜய் 26 ரன்களும் எடுத்துள்ளனர். 
 
மும்பை தரப்பில் ராகுல் சஹார் இரண்டு விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 
 
இந்த நிலையில் மும்பை அணி இன்னும் சற்று நேரத்தில் 132 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடவுள்ளது. மும்பை அணியில் டீகாக், ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் ஆகிய ஹிட்டர்கள் இருக்கும் நிலையில் இந்த எளிய இலக்கை எளிதில் எட்டுமா மும்பை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்