தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. திருட்டு விசிடி தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. இதை தடுக்க இதுவரை யாரும் தைரியமாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது இந்த நிலை மாறிவிட்டது. திருட்டு விசிடியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுப்போம்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலும், ஆர்கே நகர் தேர்தலும் அருகருகே வந்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இல்லையெனில் அங்கேயும் ஒரு கூட்டணி போட்டு ஜெய்ச்சிருப்போம். விஷாலிடம் மச்சான் கொஞ்சம் நேரம் இருந்தா ஆர்.கே நகரில் போட்டியிலாமா என கிண்டலடிப்பேன். யாரும் இதைத்தான் செய்ய வேண்டும் என்ற வரைமுறை எதுவும் இல்லையே.
நடிகர் விஷால் நடிக்க வரும்போது, நடிகர் சங்கத்துக்கு வருவார் என நினைக்கவில்லை. சும்மா இருந்தால், எந்த காரியமும் செய்ய முடியாது என்று கூறுயுள்ளார்.