தர்பார் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் படம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தவறாக சித்தரிப்பதாக கூறியுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். நேற்று வெளியான இந்த படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளதோடு வசூலையும் குவித்து வருகிறது. இருப்பினும் இதில் போலீஸ் அதிகாரிகளை பற்றிய தவறான கண்ணோட்டங்கள் அதிகமாக இருப்பதாக சிலர் குறைப்பட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் தனது ட்விட்டரில் ” ஐயா, டேய் தமிழ் இயக்குனர் களா ... இனிமே இந்த IAS ,IPS பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா .. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது ..” என்று கூறியுள்ளார். அவர் தர்பார் படத்தையும், முருகதாஸையும்தான் குறிப்பிடுகிறார் என கூறப்படுகிறது.
படத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ரஜினி ரவுடிகளை கண்ட மேனிக்கு சுட்டு தள்ளுவதாகவும், மனித உரிமை ஆணைய அதிகாரிகளை துப்பாக்கி வைத்து மிரட்டுவதாகவும் உள்ள காட்சிகளுக்கு சமூகநல அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.