காஜல் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை; முன்னாள் கணவர்

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (15:10 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிதாய் எண்ட்ரி கொடுத்திருக்கும் காஜல் பசுபதி, வளர்ந்து வரும் நடன இயக்குனரான சாண்டி  மாஸ்டரின் முதல் மனைவி என செய்திகள் தீயாய் பரவியது.

 
கருத்து வேறுபாடு காரணமாக சாண்டியும் காஜலும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்த வகையில் நடிகை காஜலைப் பற்றி முன்னாள் கணவர் நடன இயக்குனர் சாண்டியிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்துள்ளார்.
 
தொடர்ந்து சாண்டி கூறுகையில், என் கடந்த காலத்தில் நான் ரொம்பக் கஷ்டப்பட்டுள்ளேன். அதனால் அதை மறக்க  நினைக்கிறேன். காஜல் பற்றி எதுவும் பேச விரும்பம் இல்லை. அவங்களை மறந்துட்டேன் என்று கூறியுள்ளார்.
 
அண்மையில் சாண்டி இரண்டாவதாக சில்வியா என்பவரை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்