பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி, ஆர்த்தி தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கெனவே பரபரப்பை கிளப்பிய ஜுலி மற்றும் ஆர்த்தி மீண்டும் நேற்று வீட்டில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
அவர்களால் என்னென்ன பிரச்சனை வரும் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் Luxury பட்ஜெட் போட்டியை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதில் இன்றைய டாஸ்க்கில் தோற்கும் அணி பிக் பாஸ் வீட்டின் அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்று குண்டு ஆர்த்தி கூறும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதனை ஆர்த்தி படித்தவுடன் சிநேகன், பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே சென்று அமர்ந்துகொண்டு, இனி போட்டிகளை என்னால் விளையாட முடியாது என்று கூற அவரை சமாதானம் செய்கிறார் ஜுலி.