கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார். இந்த படத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் ஆதரவாகப் பேசினர். மேலும் இந்த படம் இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பை விதைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஓடிடி பிரிமீயர் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் மே 13 ஆம் தேதி ஜி 5 ஓடிடியில் பிரிமீயர் ஆனது.
இந்த திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கர் பரிந்துரக்கு செல்லும் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கேரளாவில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படம் பற்றி பேசிய பிரகாஷ் ராஜ் “இந்த படத்தின் இயக்குனர் ஆஸ்கர் ஏன் கிடைக்கவில்லை என கேட்கிறார். அவருக்கு ஆஸ்கர் இல்லை பாஸ்கர் கூட கிடைக்காது. ஏனென்றால் அது முட்டாள்தனமான படம்” எனக் கூறியிருந்தார்.