கரூரில் உள்ள 2 வழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றம்: ரூ.137 கோடி ஒதுக்கீடு!

புதன், 8 பிப்ரவரி 2023 (15:42 IST)
கரூரில் தற்போது இருக்கும் இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
 
வைரமடையில் இருந்து கரூர் வரை இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வதற்கும், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் உற்பத்தி பொருட்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வதற்கும் பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
கரூர் திருச்சி தஞ்சாவூர் நாகப்பட்டினம் சென்னை கோவை ஊட்டி ஆகிய முக்கிய மாவட்டங்களை இணைக்கும் இந்த சாலையில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதை அடுத்து இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த சாலையை நான்கு வழிசாலையாக அகலப்படுத்த 137.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்