யானை படத்துக்குப் பிறகு தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய ஹரி… இவர்தா ஹீரோ!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:04 IST)
இயக்குனர் ஹரி அடுத்து தெலுங்கு நடிகர் கோபிசந்தை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு, வேல், சிங்கம் 1, 2, 3 ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றவை. இதையடுத்து அவர்கள் கூட்டணியில் அருவா என்ற படத்தில் இணைய இருந்தனர். ஆனால் சூர்யாவுக்குக் கதை பிடிக்காததால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் சூர்யா. இதனால் ஹரி சூர்யா மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்.

இதையடுத்து இப்போது அவர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் மே 6 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹரி தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தற்போது தொடங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த் நடிப்பில் உருவாகும் தெலுங்கு படத்தை இயக்க பேச்சுவார்த்தைகளை அவர் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்