நான்காம் இடம்பிடித்த ஹன்சிகா

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (18:28 IST)
டுவிட்டரில் 30 லட்சம் ஃபாலோயர்களைப் பெற்று நான்காம் இடம் பிடித்துள்ளார் ஹன்சிகா.


 

 
மும்பையைச் சேர்ந்த ஹன்சிகா மோத்வானி, ஹிந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி, ஹிந்தி மற்றும் கன்னடப் படங்களிலும் நடித்தார். ஜெயம் ரவி ஜோடியாக ‘எங்கேயும் காதல்’ படத்தில் பிரபுதேவா அறிமுகப்படுத்திய ஹன்சிகாவுக்கு, அதிர்ஷ்டம் அலைகடலெனத் திரண்டு வந்தது. எல்லாம் சில வருடங்கள்தான். வெள்ளைத்தோல் வெறுத்துப்போக, ‘ச்சீய்… இந்தப் பழம் புளிக்கும்’ என்ற கதையாக ஹன்சிகாவை கண்டுகொள்ள ஆளில்லை.
 
வேறு வழியில்லாமல் அறிமுகப்படுத்திய பிரபுதேவாவே தனக்கு ஜோடியாக ‘குலேபகாவலி’ படத்தில் நடிக்க வைத்துள்ளார். மேலும், இதுவரை மலையாளம் பக்கம் தலைகூட காட்டாத ஹன்சிகா, ‘வில்லன்’ படத்தில் நடிக்கிறார். சினிமாக்காரர்கள் அவரை மறந்தாலும், ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை. ட்விட்டரில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 30 லட்சமாக உயர்ந்துள்ளது. இதன்படி, தென்னிந்திய நடிகைகளில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் ஹன்சிகா. ஸ்ருதி, சமந்தா, த்ரிஷா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
அடுத்த கட்டுரையில்