நவரசா ஆந்தாலஜியில் இருந்து இயக்குனர் ஹலிதா ஷமீம் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் இயக்குனர் சர்ஜுன் இணைந்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா ஆகியோர் இணைந்து நெட்பிளிக்ஸுக்காக ஆந்தாலஜி திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த தொடருக்கு கிரியேட்டிவ் ஹெட்டாக மணிரத்னம் உள்ளார். இந்த 9 படங்களையும் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், கே வி ஆனந்த், ஹலிதா ஷமீம், பொன்ராம் ஆகியோர் ஒப்பந்தமானார்கள்.
இதில் சில படங்களின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் இப்போது இந்த ஆந்தாலஜியில் இருந்து சில்லுக் கருப்பட்டி புகழ் இயக்குனர் ஹலிதா ஷமீம் விலகியுள்ளார். அவர் இயக்கி வரும் ஏலே படத்தின் பணிகள் இருப்பதால் இதில் இருந்து அவர் விலக, அவருக்கு பதில் இயக்குனர் சர்ஜுன் அந்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.