இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,07,871 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,47,901 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,82,669 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 20,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21,131 பேர் குணமடைந்துள்ளதாகவும், 279 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.