அரை நிர்வாண நிலையில் பிணமாக தொங்கிய பிரபல தொகுப்பாளினி

Webdunia
புதன், 13 டிசம்பர் 2017 (11:36 IST)
மும்பையில் சேர்ந்த அர்பிதா திவாரி (24 வயது) நிகழ்ச்சி தொகுப்பாளினி அடுக்குமாடி குடியிருப்பின் 2வது மாடியில், பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் அர்பிதா திவாரி(24). நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். அவர் அண்மையில் தனது காதலர் பங்கஜ்  ஜாதவுடன் சேர்ந்து விளம்பர நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருந்த  நிலையில், அர்பிதா தனது காதலருடன் சேர்ந்து மானவ்ஸ்தல் ஹைட்ஸ் என்ற 19 அடுக்குமாடி குடியிருப்புக்கு அதிகாலை 3  மணிக்கு சென்றுள்ளனர்.
 
அவர்களின் நண்பர் 15வது மாடியில் வசித்து வருகிறார். 4 மணிக்கு அனைவரும் தூங்கியுள்ளனர். காலை 7 மணிக்கு எழுந்த  ஜாதவ் பாத்ரூமுக்கு சென்றபோது அது உள்புறமாக பூட்டியிருந்ததால் சென்றுவிட்டார். மீண்டும் எழுந்து வந்தபோதும் பாத்ரூம்  பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்து சாவி போட்டு திறந்து பார்த்தபோது, பாத்ரூம் ஜன்னலின் கண்ணாடியை எடுத்து தரையில் வைத்திருந்ததை பார்த்தனர். அர்பிதாவை வீட்டில் காணாமல் தேடிப் பார்த்தபோது அர்பிதா 2வது மாடியின் குழாயில் பிணமாகத்  தொங்கியது தெரிய வந்தது. அவர் உள்ளாடையில் அரை நிர்வாணமாக கிடந்துள்ளார். 
 
இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர் தானாக குதித்தாரா, தவறி விழுந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்