அஜித்திடம் அரசியல் பற்றி பேசினால் இதுதான் நடக்கும்… ஹெச் வினோத் தகவல்!

Webdunia
திங்கள், 5 டிசம்பர் 2022 (09:18 IST)
அஜித் நடிக்கும் துணிவு படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.

அஜித் ஹெச் வினோத் கூட்டணியின் மூன்றாவது படமாக துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்போது படத்தின் இயக்குனர் ஹெச் வினோத் படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் “அந்த கதாபாத்திரம் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. வில்லன் வேடம் என்றால் உடனே மங்காத்தாவா எனக் கேட்கிறார்கள். அவர்களின் கற்பனையெல்லாம் கொட்டுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அஜித்திடம் அரசியல் பற்றி தான் எதுவுமே பேசியதில்லை என்று கூறியுள்ள ஹெச் வினோத் “ அஜித்திடம் யாராவது அரசியல் பேசினால், அவர்கள் பேச்சை நிறுத்திவிட்டு, இதிலெல்லாம் கவனம் செலுத்தாதீர்கள். உங்கள் குடும்பம் மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறுவார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்