கமல் நிறுவனத்துக்கு படம் இயக்கும் ஹெச் வினோத்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (09:07 IST)
இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கி வருகிறார்.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் படம் பற்றிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் படி விஜய் சேதுபதியை வினோத் தனது அடுத்த படத்தில் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது அவர், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் துணிவு படத்தை முடித்த பின்னர் அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தைதான் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை மாஸ்டர் மற்றும் கோப்ரா ஆகிய படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்