வலிமை இயக்குனர் ஹெச் வினோத் வீட்டில் மகிழ்ச்சியான் செய்தி!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (10:36 IST)
வலிமை இயக்குனர் ஹெச் வினோத் ஆண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமான இயக்குனர் ஹெச் வினோத் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் அவர் கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. அவரின் திறமையைப் பார்த்து வியந்த அஜித் அவருக்கு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். அதன் பின்னர் இப்போது வலிமை திரைப்படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹெச் வினோத்துக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக அவரது மனைவி ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்