டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் அதில் நிறுவனத்தின் லாபம் 7.17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை அறிந்ததும் இந்நிறுவனத்தின் பங்குகளை போட்டி போட்டு கொண்டு முதலீட்டாளர்கள் வாங்கினர். இதனால் 3,5 சதவிகிதம் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளது. தற்போது டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கின் விலை 3230 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் மட்டுமின்றி இன்போசிஸ், ஹெச்.சி.,எல், விப்ரோ, டெக் மஹேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளும் இன்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது