ஆக்‌ஷன் ஹிட் பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (23:00 IST)
தமிழ் சினிமாவில் விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி ஆக்சன் கதை, சூப்பர் ஹிட் படங்களுக்குப் பேர் போனவர் இயக்குநர் ஹரி.

இவரது இயக்கத்தில் சிங்கம் 1,2 ; சாமி 1 படங்கள் வெற்றிபெற்றாலும் சிங்க 3, சாமி 2 படங்கள் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சூர்யாவை வைத்து அருவா என்ற படத்தை இயக்கவிருந்தார். ஆனால் அப்படம் டிராப் ஆனது. ஆனால் அப்படத்தலைப்பில் அவரது மைத்துனர் அருண்விஜய் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே பரத் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான சேவல் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அருண்விஜய் நடிக்கும் அருவா படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

ஹரியுடன் அவர் இணையும் 2 வது படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்