ஜிவி பிரகாஷின் ‘பேச்சிலர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்!

Webdunia
வியாழன், 11 பிப்ரவரி 2021 (21:39 IST)
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களில் ஒரு சில படங்கள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ‘பேச்சிலர்’. சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கிய இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், லோகேஷ் படத் தொகுப்பில் உருவான இந்த படம் படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் டீஸர் பிப்ரவரி 13ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஜிவி பிரகாஷின் ‘பேச்சிலர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்